ETV Bharat / state

ஊரடங்கை மீறி இறைச்சிக் கடை திறப்பு: 100 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - இறைச்சி கடை திறப்பு

சென்னை: ராயபுரம் பகுதியில் கரோனா ஊரடங்கை மீறி இறைச்சிக் கடையைத் திறந்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்த அலுவலர்கள் 100 கிலோ ஆட்டிறைச்சியைப் பறிமுதல்செய்தனர்.

100 kg of mutton confiscated!
100 kg of mutton confiscated!
author img

By

Published : Jun 2, 2021, 7:13 AM IST

சென்னை ராயபுரம் பகுதிக்குள்பட்ட சிதம்பரம் நகர்ப் பகுதியில் கரோனா ஊரடங்கை மீறி, ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், இறைச்சிக் கடையின் கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சுமார் 100 கிலோ எடையுள்ள இறைச்சியைப் பறிமுதல்செய்த மாநகராட்சி நிர்வாகம், கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.