ETV Bharat / state

குவார்ட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகம் - புலம்பும் மதுப்பிரியர் - வரும் டாஸ்மாக்

சென்னையில் உள்ள மதுக்கடை ஒன்றில் குவார்ட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்பதை தட்டிக்கேட்ட மதுப்பிரியரிடம் திமிராகப்பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

Etv Bharatகுவார்ட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகம் - புலம்பும் மதுபிரியர்

author img

By

Published : Oct 11, 2022, 10:19 AM IST

சென்னை: மதுபாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகம் விற்கப்படுவது குறித்து மதுப்பிரியர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் விற்கப்படுவதாகவும்; அதனால் தானும் அப்படித்தான் விற்பேன் என்றும் கடையில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்பது தமிழ்நாடு அரசின் விதி, ஆனால் சென்னையை அடுத்த குன்றத்தூர் ஆண்டாள்குப்பத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், குவார்ட்டர் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், மதுப்பிரியர் ஒருவர் தன்னால் 10 ரூபாய் கூடுதலாக கொடுக்க முடியாது என்றும்; அரசு நிர்ணயித்த விலைக்கே மது பாட்டிலை தனக்கு வழங்க வேண்டும் எனவும் கடையின் சூப்பர்வைசரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மது வாங்க வந்தவரை வசைபாடிய டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்குத்தான் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் தானும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

குவார்ட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகம் - புலம்பும் மதுபிரியர்

குன்றத்தூர் ஆண்டாள்குப்பத்தில் செயல்பட்டு வரும் அந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்து 500 மது பாட்டில்கள் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் டாஸ்மாக் சூப்பர்வைசர் ஜெயகுமார் மற்றும் கடையின் ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை முறைகேடாக வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு காவல்துறையின் 'ஆப்ரேசன் மின்னல் ரவுடி வேட்டை' - 72 மணிநேரத்தில் 3,095 ரவுடிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.