காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘காவலன் செயலியின் பட்டனை அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு காவலர்களால் உதவ முடியும். தேசிய குற்ற ஆவண காப்பகம் மற்றும் செய்தி இதழில் வெளிவந்த கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் குற்றங்கள் வன்முறை குறைந்துள்ளன.
இருப்பினும், குற்றம் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றோம். சங்கிலிப்பறிப்பு 50 சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் இந்தக் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல், 100 என்ற காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
ஐடி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தற்போது கூட என்னிடம் பேசி நீதிமன்றத்தில் வழக்குவரும்போது சொல்லுங்கள் நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறியுள்ளார். முகம் தெரியாத நண்பர்களோடு சமூக வளைதளங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் இதனைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, உங்களைச் சார்ந்தவர்களுக்குப் பதிவிறக்கம் செய்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு - காவல் ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு