ETV Bharat / state

நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 1.16 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்புடைய 1.16 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 31, 2023, 7:55 PM IST

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்திற்கு சூட்கேசில் (Suitcase) உள்ள ரகசிய அறைக்குள், கருப்பு கார்பன் பேப்பர் (Black carbon paper) சுற்றி மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 63 லட்சம் மதிப்புடைய சுமார் ஒரு கிலோ 165 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகள் (Customs officers) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Dubai Emirates Airlines) பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (மே 30) இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி துபாய்க்கு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு, துபாய் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் திரும்பி வந்தார்.

அப்போது அவரது நடவடிக்கைகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை நிறுத்தி சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். விசாரனையின்போது அந்தப் பயணி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல் தீவிர சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

இதனை அடுத்து அந்த பயணி கொண்டுவந்த சூட்கேசில் (Suitcase) ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அதை உடைத்து பார்த்த போது அதனுள் கருப்பு கார்பன் பேப்பர் (Black carbon paper) சுத்தப்பட்ட நிலையில் 10 தங்க கட்டிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விமான நிலையத்தில் சூட்கேசை (Suitcase) ஸ்கேன் செய்யும் போது, ஸ்கேனில் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியாமல் மறைப்பதற்காக மிகவும் தந்திரமாக தங்கக் கட்டிகளை கருப்பு கார்பன் பேப்பர்களில் சுற்றி மறைத்து எடுத்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.

மேலும் அந்த 10 தங்கக் கட்டிகளின் மொத்த எடை ஒரு கிலோ 165 கிராம் என்றும் அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 63 லட்சம் என்றும் தெறிவித்துள்ளனர். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து அதோடு பத்து தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சென்னை பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: நூதன முறையில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுனர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.