சென்னை: மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து, பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது ஒரு பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸ் ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த அதிகாரிகள் அந்த எமா்ஜென்சி லைட்டை எடுத்து பார்த்த போது, அது வழக்கத்தை விட அதிக எடை கொண்டதாக இருந்தது. இதை அடுத்து அந்த விளக்கை கழற்றி பார்த்து சோதித்தனா். அதனுள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். எமா்ஜென்சி லைட்டிற்குள்ளிருந்து 1.8 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.79.44 லட்சம் ஆகும்.
இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். மலேசிய நாட்டிலிருந்து தங்கத்தை நூதனமான முறையில் கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மகளை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய ஆட்டோ ஓட்டுனர்; வெட்டிக் கொலை செய்த தாய் கைது!