சென்னை: காவேரி கூக்குரல் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில், தரமான டிம்பர் மரக்கன்றுகள் ரூ.3-க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பயணங்கள் மூலமாக விவசாய நிலங்களில் மரம் வளர்ப்போம். ஏற்கனவே இருக்கும் 30 நர்சரிகளுடன் சேர்ந்து கூடுதலாக 12 புதிய நர்சரிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. பயிர்களுக்கு இடையில் அல்லது நிலம் முழுவதும் பல்வேறு வழிகளில் மரங்களை வளர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, டிம்பர் போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு பெரும் தொகைகள் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயாக கிடைக்கும்.
காவிரி கூக்குரல் இயக்கம் மூலமாக விவசாயிகளை நேரில் சந்தித்து பல்வேறு இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்” என பேசினார்.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் தற்கொலை!