செங்கல்பட்டு மாவட்டம், நைனார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர்கள், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஆவர். அதே பகுதியில் வசித்து வருபவர்கள் அபினேஷ்(19), சின்னா (19). கடந்த 30ஆம் தேதி மாலை 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதை சின்னா, அபினேஷ் ஆகியோர் மறைந்திருந்து, தங்களது செல்போனில் படம்பிடித்துள்ளனர்.
படம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், அந்தச் சிறுவர்களின் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இதனைக் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணிற்கு அழைத்துப் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்த புகாரை தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவர்களின் ஆபாசப் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய 2 இளைஞர்களின் ஐபி முகவரியை வைத்து, கடந்த 10ஆம் தேதி கண்டுபிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு - உதவிக்கரம் நீட்டும் மக்கள் தேசம் அமைப்பு!