செங்கல்பட்டு: தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தனக்கென தனி பாணியை உருவாக்கி தமிழ்த் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக இவர் இசையமைத்த படங்கள் பெரு வெற்றி பெற்றதோடு, பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன.
அண்ணாமலை, பாட்ஷா போன்றவை இவர் இசையமைத்த படங்களுக்கு சில உதாரணங்கள். தூர்தர்ஷனில் ஊழியராகப் பணிபுரிந்து வந்த தேவா, பிரசாந்த் நடித்த 'வைகாசி பொறந்தாச்சு' படத்தின் பாடல்கள் மூலம் தமிழ்த் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர்.
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள அரைக்காசு அம்மன் கோயில் மற்றும் லட்சுமி குபேரர் கோயிலில் சமீபத்தில் தேவா சாமி தரிசனம் செய்தார். அப்போது மனம் உருகி பாடிய வண்ணம் தேவா இறைவழிபாடு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'சுவாமியே சரணம்' சாப்பாட்டு இலைகள் மீது அங்கப்பிரதட்சிணம்!