ETV Bharat / state

கல்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்! - கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே புதிதாக அமைந்துள்ள கல்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் கிராம மக்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தும் கிராம மக்கள்
author img

By

Published : Feb 11, 2021, 1:15 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூரில், சில மாதங்களுக்கு முன்னதாக, புதிதாக கல்குவாரி ஒன்று திறக்கப்பட்டது. அதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் குவாரி இது என்று கூறப்படுகிறது.

இந்தக் கல்குவாரிக்கு குன்னத்தூர், சீர்வாடி, நீலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். குவாரிக்கு வரும் லாரிகளை மறித்தும், சாலையில் மின் கம்பங்களைப் போட்டும் போராட்டம் நடைபெற்றது.

தச்சூரில் புதிதாக அமைந்துள்ள கல்குவாரிக்கு, சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருவது, அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தும் கிராம மக்கள்

சில நாள்களுக்கு முன்னதாக, உத்திரமேரூர் அருகே மதூரில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், பல தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பர்கூர் அருகே பயன்பாடின்றி கிடந்த வெடிமருந்துப் பொருள்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.