செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி காவல் நிலைய எல்லைகுள்பட்ட முருங்கை கிராமத்தில் வசித்துவருபவர் பொன்னன். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு, பரணி என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நவம்பர் 28ஆம் தேதி, விமலா தன்னுடைய வீட்டு சமையலறையில், சோறு சமைத்துவிட்டு, அதனை வடிக்க வைத்துவிட்டு பிற வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை, சோறு நீர் வடிந்துகொண்டிருந்த பாத்திரத்தை இழுத்து கீழே தள்ளிவிட்டது.
இதில், கொதிநிலையில் இருந்த சோறு வடிநீர், குழந்தையின் இடுப்புக்குக் கீழ் கொட்டியது. இதில், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த குழந்தை நேற்று (டிச. 1) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஒரத்தி காவல் துறையினர், குழந்தை இறப்பு குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு!