ETV Bharat / state

திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தொழிற்துறை அமைச்சர் - Minister of Industry

செங்கல்பட்டு: திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தொழிற்துறை அமைச்சர்

author img

By

Published : Jun 14, 2021, 1:42 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று (ஜூன் 13) திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியின் இணையதளத்தை விசிக நிறுவன தலைவர் தொல். திருமாவளவன் இணையம் மூலமாக தொடங்கிவைத்தார்.

முதலமைச்சரின் நிவாரண நிதி

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர் என மொத்தம் 550 பேருக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள் இணைந்த தொகுப்பினை வழங்கினார்.

தொடர்ந்து முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூ. 15,000-திற்கான காசோலையை கேளம்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் அமைச்சரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதய வர்மன், மதிமுக ஒன்றிய செயலாளர் லோகு, விசிக மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விசிக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.