ETV Bharat / state

செய்யூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு - Chengalpattu district latest news

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகேயுள்ள பவுந்தங்கரணையில் 13 வயது சிறுமி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

child death in seyyur
செய்யூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
author img

By

Published : Dec 11, 2020, 10:11 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பவுந்தங்கரணையைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பாவனா (13) என்ற மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், சிறுமி பாவனா தனது தம்பியுடன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

பெற்றோர் இருவரும் நூறு நாள் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், குளத்தில் குளித்த சிறுமி மூழ்கியதாகத் தெரிகிறது. அக்காவை காணாத சிறுவன் அலறியதால், அக்கம்பக்கத்தினர் வந்து குளத்தில் மூழ்கிய சிறுமியை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறி உடற்கூராய்விற்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பினர். செய்யூர் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வழிதவறிய மூதாட்டி: உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.