செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன், கட்சி வளர்ச்சி பணிகள், சட்டப்பேரவை தேர்தல், கரோனா தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகவும், கிராமப்புற சுகாதாரத் திட்டம் என அறிவித்தும் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை எப்போது? - ராமதாஸ் கேள்வி!