செங்கல்பட்டு: புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், தற்போது பல்வேறு திட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டட வளாகம் கட்டுதல் உள்பட பல வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழவேலி ஊராட்சியில் புதிதாக இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஜேசிகே நகரில் புதிதாக பூங்கா அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை, இன்று (மார்ச் 27), திடீரென தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பார்வையிட வந்த தலைமைச் செயலர், நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தார்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம்