செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள அருள்நகர், ஜெகதீஷ் நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. சில வீடுகளின் உள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளது.
அவரசத் தேவைக்குகூட அப்பகுதியினர் வெளியே வரமுடியாத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய்களை சரியாக பராமரிக்காததும், ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாததும் இதற்கு காரணம் எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: டெல்லியில் வெளுத்து வாங்கும் ஆலங்கட்டி மழை