செங்கல்பட்டு: சாந்தி நகரில் அமைந்துள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று, குறைந்த முதலீட்டுக்கு அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள திம்மாவரம், படாளம், திருக்கழுக்குன்றம், வள்ளிபுரம், திருப்போரூர், திம்மூர் போன்ற 15 கிராமங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த தனியார் நிறுனத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆசை காட்டி மோசம்
முதல் தவனை கட்டிய போது, மறுமாதம் தவணைத் தொகை செலுத்தும் போது, முதல் தவணைக்காக கொடுத்த பணம் திருப்பித் தரப்படும் என அந்நிறுவனம் தனியார் நிதிநிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், 13ஆம் தேதியன்று நிதிநிறுவனம் மூடி இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, நிறுவனத்தின் மேலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, தனியார் நிதிநிறுவனம் மோசடி செய்து அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்பு குவிந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து மோசடி செய்த கும்பலை கண்டுபிடித்து, பணத்தை மீட்டுத் தருவதாக தெரிவித்தப் பின்னர் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.
இதையும் படிங்க: தில்லுமுல்லு ஸ்டைலில் மோசடி... இரட்டை வேட நாயகனுக்கு போலீஸ் வலைவீச்சு