செங்கல்பட்டு: வண்டலூர் ஊராட்சி ஜிஎஸ்டி சாலையில், அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் முப்பத்தி இரண்டு சென்ட் இடம் உள்ளது. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, இந்த இடத்தை, தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து, பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய மதிப்பில் சுமார் 50 கோடி மதிப்பிலான இந்த இடத்தில் உணவு விடுதி, வாகன பழுது நீக்கும் கடை கட்டப்பட்டு, வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர் அதிரடியாகக் களம் இறங்கி, அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர். இந்த இடத்தில், அரசுத்துறை சார்ந்த அலுவலகங்கள் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அரசு நிலத்தை பட்டா போட்ட வழக்கில் ஜாமீன் மனு ஒத்திவைப்பு