செங்கல்பட்டு: நீட் தேர்வு அச்சம் காரணமாக செப்.12ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெறும் தற்கொலை சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அய்யநேரி பகுதியைச் சேர்ந்த மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் இவர் நீட் தேர்வை திறம்பட எழுத முடியவில்லை என்பதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது அவர் 40 விழுக்காடு தீக்காயங்களுடன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்வு பயத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை