ETV Bharat / state

செங்கல்பட்டு விபத்தில் 4 பேர் பலி: லாரி ஓட்டுநர் கைது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் அஞ்சலி!

Chengalpattu lorry accident: செங்கல்பட்டு அருகே லாரி மோதி உயிரிழந்த நான்கு பேர் உடலுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

செங்கல்பட்டு விபத்தில் 4 பேர் பலி: லாரி ஓட்டுநர் கைது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு!

author img

By

Published : Aug 11, 2023, 6:41 PM IST

செங்கல்பட்டு விபத்தில் 4 பேர் பலி: லாரி ஓட்டுநர் கைது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு!

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடக்க முயன்ற மூன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது விபத்தில் உயிரிழந்தவர்கள் பொத்தேரி பகுதியைச் சேர்ந்த பவானி(38) மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களான கார்த்திக்(19) ஜஸ்வந்த்(19) என்பது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த ஒருவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பியோடிய லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மூன்று இருசக்கர வாகனங்களின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மன வேதனை அடைந்தேன். செங்கல்பட்டு ஆட்சியரை சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மீட்பு பணிகள், மருத்துவ சிகிச்சைக்கான உதவியை செய்ய அறிவுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம், படுகாயமடைந்த பார்த்தசாரதி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொத்தேரியில் அதிவேகமாகச் சென்ற லாரி கட்டுபாட்டை இழந்து, சாலையை கடக்க நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க : சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.