செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன் பிடித்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதிலும் கடப்பாக்கம் தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் வரை பல்லாயிரக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நீண்ட நாள் கோரிக்கை இப்பகுதியில் மீன் பிடி துறைமுகம் அமைய வேண்டும் என்பதாகும். இவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு கடந்தாண்டு, விதி எண்110-ன் கீழ் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் துறைமுகம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று (ஜன.29) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், உடனடியாக மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் ஒன்றிணைந்தால் பெரும் லாபம் ஈட்டலாம் - உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்