ETV Bharat / state

நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி - Maduranthakam update

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Maduranthakam
Maduranthakam
author img

By

Published : Dec 3, 2020, 11:17 AM IST

ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படுவது, 'செங்கல்பட்டு மாவட்டம்'. மாவட்டத்தின் ஊராட்சிகளில், பெரும்பலான ஊராட்சிகள் ஏரிகளைக் கொண்டதாகத்தான் இருக்கும் என்பதே இம்மாவட்டத்தின் சிறப்பு.

தமிழ்நாடு அளவில் புகழ்பெற்ற ஏரியான 'மதுராந்தகம் ஏரி', இம்மாவட்டத்தில் உள்ளது தனிச் சிறப்பு ஆகும். மதுராந்தகம் நகரிலுள்ள அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள, கோதண்டராமருக்கே, 'ஏரி காத்த ராமர்' என்ற பட்டப் பெயர் வழங்கிய ஏரி இது.
கடல் போலக் காட்சியளிக்கும் இந்த ஏரியின் பாசனப் பரப்பு, 2853 ஏக்கர். ஆறு கலங்கல்களை உடைய இது, ஏறத்தாழ 700 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரியின் நீர்ப்பிடிப்புப் பரப்பு மட்டுமே, 248 ஏக்கர் என்பதிலிருந்து, இதன் பிரமாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

'மதுராந்தகம்' சுற்று வட்டார கிராமங்களிலுள்ள பல கிரமாங்களின், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், பாசனத்திற்காக இந்த ஏரியை நம்பியே உள்ளன. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மதுராந்தகம் ஏரி உள்ளது. இதன் ஆழம், சுமார் 125 அடிகள்.

தற்போது இந்த ஏரி நிரம்பி வழிந்து, உபரி நீர் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. இவற்றில் தற்போது, 327 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 174 ஏரிகள், 75 விழுக்காட்டுக் கொள்ளளவையும், 27 ஏரிகள் 50 விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளன எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.