ETV Bharat / state

போலி சான்றிதழ்: 36 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியருக்கு கட்டாய ஓய்வு!

author img

By

Published : Apr 29, 2022, 2:16 PM IST

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்று போலி சான்றிதழ் கொடுத்து, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் 36 ஆண்டுகள் பணியில் இருந்த ஊழியர், நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று (ஏப்.28) முதல் பணியில் இருந்து விலக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு: கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு கணேசன் என்பவர் ஊழியராக இருந்தார். இவர் 1986ஆம் ஆண்டு, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியாளராக (trainee) விண்ணப்பித்துள்ளார். அப்போது, வயது வரம்பில் சலுகை பெறுவதற்காக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கணேசன், தான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று, போலியான சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளார்.

பயிற்சி முடித்த கணேசன் 1989ஆம் ஆண்டு அங்கேயே பணியமர்த்தப்பட்டார். பின்னர் 1992ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திற்கு பணியிட மாறுதலில் வந்தார். அங்கு அணு ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கான எஸ்.சி., எஸ்.டி., சங்கத்தினர், இவரது சான்றிதழ்களை ஆராய்ந்த போது, போலியானது என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு, சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணேசன் கைது செய்யப்பட்டதோடு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கணேசன், 2013இல், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அங்கு இவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஏழு ஆண்டுகள் கழித்து, 2020ஆம் ஆண்டு கணேசனுக்கு ஆதரவான மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகம்மது ஷபீக் அடங்கிய அமர்வு, கணேசனுக்கு கட்டாய ஓய்வு அளித்தும், அவருக்கு உண்டான ஓய்வூதிய பலன்கள், 40 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கிற்கான முன்னெடுப்பை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் தாமதமாக மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், முன்னதாகவே இந்த நடவடிக்கையில் அணு ஆராய்ச்சி மையம் இறங்கியிருந்தால், குற்றவாளி கணேசனுக்கு, குறைந்தபட்ச சலுகை கூட அளித்திருக்க வேண்டியிருந்திருக்காது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த உத்தரவால் கணேசன் நேற்று (ஏப்.28) முதல் பணியில் இருந்து விலக்கப்பட்டார்.

அணு ஆராய்ச்சி மையத்தில் போலி சான்றிதழ் மூலம் கணேஷன் 1986 முதல் 2022ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 36 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.