ETV Bharat / state

ஜன.,30 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெறும், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்

author img

By

Published : Jan 22, 2021, 6:21 AM IST

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 30 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசுக் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான, தகுதியான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு முடித்தவர்களும்,10, 12 வகுப்புகளை முடித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் என்ஜினியரிங் படித்தவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு அனுமதி இலவசம்.

வேலை தேடுவோர், தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். முகாம் நடைபெறும் நாள் அன்று, முகாம் நடைபெறும் இடத்திலேயே, காலை 10 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, முன்பதிவு செய்து கொள்வது விரும்பத்தக்கது என மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அறிவித்துள்ளார்.

வேலை தேடுவோரும், முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்களும், சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசங்களுடன் பங்கேற்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

இதையும் படிங்க: காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அள்ளித் தந்த பக்தர்கள் - ரூ.45 லட்சம் வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.