செங்கல்பட்டு: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அச்சிறுப்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி வரை பல இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுராந்தகம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நகர்ப்புறங்களோடு கிராமங்களை இணைக்கும் சாலைகளில் வெள்ளம் வழிந்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Mudichur Flood: மீண்டும் மழையில் தத்தளிக்கும் முடிச்சூர்