செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த, ஐயஞ்சேரி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஊரப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் வகுப்பை கவனிப்பதற்கு, அனிதா தனது தந்தையிடம் செல்போன் கேட்டதாகத் தெரிகிறது. மகளின் படிப்பு கருதி கணேஷும் செல்போன் வாங்கிக் கொடுத்த நிலையில், ஆன்லைன் வகுப்பு நேரங்கள் போக அனிதா தனது செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த கணேஷ், நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேச வேண்டாம் என தனது மகளைக் கண்டித்துள்ளார். ஆனாலும், அனிதா தொடர்ந்து நண்பர்களுடன் பேசி வந்த நிலையில், ஆத்திரமுற்ற அவரது தந்தை மகளை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமுற்ற அனிதா, வீட்டில் யாருமற்ற சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கூடுவாஞ்சேரி காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : ”அதிமுக அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இயேசுபிரான் பார்த்துக் கொள்வார்”