இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் (First Hybrid Rocket Launch) மாமல்லபுரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 3500 அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை சுமந்தபடி வானில் இன்று (பிப்.19) ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவுதல் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 3500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை போன்ற தகவல்களைப் பெறலாம் எனக்கூறப்படுகிறது.
இதனைக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பலக்குழுக்களாகப் பிரிந்து, மாணவர்கள் இந்த செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளனர். கணினி உதவியுடன் மென்பொருளை செயற்கைக்கோளுடன் வடிவமைத்து ஆய்வு செய்வதே அரசுப் பள்ளி மாணவர்களின் பணியாகும்.
இந்த செயற்கைக்கோள் வானில் ஏவப்பட்டதன் மூலம் ஒரு செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது எனவும்; இவ்வாறு பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்கவேண்டும் எனவும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும்: குடியரசுத் தலைவர் முர்மு