ETV Bharat / state

80 வயதில் டாக்டர் பட்டம் - தமிழில் அசத்திய தாத்தா - 80 வயது மாணவருக்கு முனைவர் பட்டம்

செங்கல்பட்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், 80 வயதுடைய மூத்த மாணவர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 11, 2022, 9:39 PM IST

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நேற்று (நவ.10) நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்கலைத் தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற 208 மாணவர்களுக்கு பதக்கம், பட்டங்களை வழங்கினார்.

அப்போது உரையாற்றிய அவர், “பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்துகிறேன். பட்டம் பெறும் நீங்கள் உங்களது திறமைகளை ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

பட்டம் பெற்றபின் அரசுத் துறையிலோ தனியார் துறையிலோ வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக நீங்கள் உருவாக வேண்டும். நமது நாடு பலதரப்பட்ட கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரிய நாடாக விளங்கியது. இந்தியாவை பலதரப்பட்ட மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். நமது பாரம்பரிய கலாசாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நமது பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

நமது நாட்டில் அந்நிய ஆட்சியின்போது கொண்டு வந்த சட்டங்கள்தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் தேவை. அதனால் பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு மக்களுக்கு பயனுள்ள புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. நாட்டிற்குப் பலமான ஜனநாயகம் தேவை என்றால், அதற்கென புதிய சட்டங்கள் தேவை.

நான் உலகில் வளர்ந்த பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன், அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களில் அதிக அளவில் நமது நாட்டு இளைஞர்கள் பணிபுரிவதைக் கண்டேன். உலகிலேயே சக்தி படைத்தவர்களாக நமது
இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் நமது நாடு வளர்ந்த நாடாக மாறும்” என்றார்.

80 வயதில் டாக்டர் பட்டம் - தமிழில் அசத்திய தாத்தா

விழாவின் சிறப்பம்சமாக , தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த பழ. முருகேசன் என்ற 80 வயது முதியவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற மின்வாரிய மேற்பார்வை பொறியாளரான பழ. முருகேசன், 'சமயக் குறவர், நால்வர் பாடல்களில் ஊழ்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம்பெற்றார்.

இதையும் படிங்க: 'கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக' - PMயிடம் CM கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.