செங்கல்பட்டு: நகராட்சி சமுதாய கூடம் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள், முடிதிருத்துவோர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 300 பேருக்கு அரிசி, மளிகை பொருள்கள், காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
கரோனா நோய் தொற்று காலத்தில் ஊரடங்கும், பல மாதங்களாக வேலையின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், துப்புறவு தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் மிக கடுமையான சூழலில் இருந்து வருகிறனர்.
இது போன்ற சூழலில் வாழ்ந்து வரும் 300 பேருக்கு திமுக அமைச்சர் தா மோ அன்பரசன் நிவாரண பொருள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'அரசுடைமையாக்கப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தையே பயன்படுத்தவும்'- அரசுக்கு வைகோ வேண்டுகோள்