செங்கல்பட்டு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரரின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 14 ஆயிரம் கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு ரூ. 4 ஆயிரம் பணம், 10 கிலோ அரிசி, 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூன்.17) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 231 பயனாளிகளுக்கு ரூ. 4 ஆயிரம் பணம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஷாகிதா பர்வின், வருவாய் கோட்டாட்சியர் பிரியா, அறநிலையத்துறை அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000: அடடே தலைமை ஆசிரியர்!