சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட ஜெயகோபால் கரோடியா நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தலைமை அலுவலர், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், இந்தத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி இரண்டு பரப்புரை ஆட்டோக்களையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதையடுத்து, செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
அதற்குத் தலைமை அலுவலர், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் ஏழு குழுக்கள் கொண்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தார்.