செங்கல்பட்டு: ஆண்டுதோறும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக குவிவது வழக்கம்.
ஆனால், தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு மேல்மருத்தூர் ஆடிப்பூர திருவிழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 10, 11 ஆகிய இரு நாள்களிலும், மேல்மருவத்தூர் கோயில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு அச்சம் - சொந்த ஊருக்கே திரும்பும் வடமாநிலத் தொழிலாளர்கள்