செங்கல்பட்டு: சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஜமுனா லேப் டெக்னீஷியனாக தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரும் அந்த மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றினார்.
ஆனந்தின் மனைவி ஜமுனா, ராஜா இருவரும் நட்பாக பழகியுள்ளனர். நாளடைவில் அவர்களது உறவு நெருக்கமடைந்து முறையற்ற உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜமுனாவின் கணவர் ஆனந்த் தனது மனைவி கண்டித்துள்ளார். அதன் பின்னர், ராஜாவிடம் பேச்சுவார்த்தையை நிறுத்துவிட்டதாக ஜமுனா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது.
திடீரென பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ராஜா, ஜமுனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜா ரசாயனத்தை ஜமுனா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர், ஜமுனாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து ஜமுனா, 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார், ராஜாவை கைது செய்து கொலை, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2018-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணையானது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடை நிலையில், நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளியான ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை - கர்ப்பிணி மனைவியுடன் கணவர் கைது!