ETV Bharat / state

கோயில் இடத்தை ஆக்கிரமித்த குளிர்பானக்கடை: மக்கள் சாலை மறியல் - செங்கல்பட்டு மக்கள் மறியல்

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த குளிர்பானக்கடைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

chengalpattu madurantakam people protested against encroachment in temple place
கோயிலிடத்தை ஆக்கிரமித்த குளிர்பானக்கடையைக் கண்டித்து சாலை மறியல்
author img

By

Published : Mar 6, 2020, 4:55 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதியான ஒத்தவாடை தெருவில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

கோயிலுக்கு சொந்தமான அருகே உள்ள இடத்தை அப்பகுதி மக்கள் நடைபாதையாகவும் ஆலயத்தை சுற்றி வரவும் திருவிழா நாட்களில் மேடை அமைத்து இசை கச்சேரி, நாடகம், மின் விளக்கு அமைத்தல் போன்றவைக்கும் பயன்படுத்தி வந்தனர்.

அவ்விடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்து குளிர்பானக்கடை அமைத்துள்ளனர். கடையை அகற்றக்கோரி அப்பகுதியினர் வலியுறுத்தினர். ஆனால் கொட்டகையை அகற்றாததால் அதனைக் கணடித்து மக்கள் மதுராந்தகம் பஜார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடையை அகற்ற வலியுறுத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

கோயிலிடத்தை ஆக்கிரமித்த குளிர்பானக்கடையைக் கண்டித்து சாலை மறியல்

இதைுயும் படிங்க: இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.