சென்னை மாவட்டம், முழுவதும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதன்படி, கடந்தாண்டு சென்னை முழுவதும் 700 கிலோ போதைப் பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ போதைப் பொருட்களை அழிக்க உத்தரவிட்டது.
அதனடிப்படையில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்த ஒன்றரை கிலோ கேட்டமைன், 4 கிலோ ஹெராயின், ஹசிஷ் ஆயில் 980 கிராம், எப்ரிடின் 77 கிலோ, பெசிடோபெரின் 75 கிலோ, 533 கிலோ கஞ்சா உள்ளிட்ட 700 கிலோ போதைப்பொருட்களை செங்கல்பட்டில் உள்ள குடோன் ஒன்றில் வைத்து தீயில் எரிந்து அழித்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது