செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டப்பேரவை தனித்தொகுதிக்கு அதிமுக சார்பில் கனிதா சம்பத் வேட்பாளராக நியமனம் செய்யப்படுவதாக அதிமுக தலைமைக்கழகம் நேற்று (மார்ச். 10) அறிவித்தது. இவர் ஏற்கனவே திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு உள்ளூர் வேட்பாளரையே தலைமை நியமிக்க வேண்டும் எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சித்தாமூர் கூட்டு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அவர்களது எதிர்ப்பு குறித்து தலைமைக்கு தெரிவிப்பதாகக் கூறி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இந்நிலையில், நாளைக்குள் புதிய வேட்பாளரை நியமிக்காவிட்டால், மீண்டும் தாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : மருத்துவமனையில் மம்தா அனுமதி!