செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சாலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட 309 பயனாளிகளுக்கு, 2 கோடிய 61 லட்சம் ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ். ஆறுமுகம் வழங்கினார்.
இந்நிகழ்வில் செங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.பக்தவச்சலம், மாவட்ட துணை செயலாளர் பி.எ.எஸ்வந்த்ராவ், ஒன்றிய பொருளாளர் ஹரிதாஸ், சாலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் துணை தலைவர் ஜானகிராமன், கூட்டுறவு சங்க செயலாளர் கங்காதரன், அதிமுக நிர்வாகிகள் லட்டூர் ஏகலைவன், பாசறை உமாசங்கர் உளிளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கூட்டுறவுக் கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை - எம்.பி. கார்த்தி சிதம்பரம்