செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது பழைய வீட்டை இடிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், ஆனந்தன், கோதண்டன் ஆகிய மூன்று பேரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில், ஜெயக்குமாருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களை, மீட்ட அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெயக்குமார் உயிரிழந்தார்.
மேலும், ஆனந்தனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சித்தாமூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.