செங்கல்பட்டு: இன்டர்நேஷனல் செஸ் ஒலிம்பியாட் எனப்படும் சர்வதேச சதுரங்கப் போட்டி மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ரஷ்ய உக்ரைன் போர் பதற்றம் காரணமாக மாஸ்கோவில் போட்டிகள் நடைபெறாத நிலையில், அந்த வாய்ப்பு தற்போது, இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக மாமல்லபுரத்திற்குக் கிடைத்துள்ளது.
கரோனா பெரும் தொற்று காரணமாக, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஆன்லைனில் மட்டுமே சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற்றன. இரு ஆண்டு, நேரிடையாக செஸ் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 2000 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் மட்டுமே, 75 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். வரும் ஜூலை, 27ம் தேதி முதல் ஆகஸ்ட், 10ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளதால், விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருப்பது மகிழ்ச்சி - ஸ்டாலின்