செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவி வரும் கரோனா தொற்றைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, முகக் கவசம் அணிவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 8ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் (ஏப்.21) வரை, 18 ஆயிரம் நபர்களிடம் அபராதத் தொகையாக 19 லட்சத்து 43 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றாத 780 பேரிடம் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆதரவற்ற மக்களுக்காக தொடங்கப்பட்ட "காவல் கரங்கள்"