குழந்தைகள் கடத்தல் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:
- குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியாகி தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை அவர்கள் போலியாகத் தயாரித்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
- எதுவுமே காவல்துறைக்கும், அரசு மருத்துவமனைகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் நடந்திருக்க முடியாது.
- பிடிபட்டிருக்கும் குழந்தை விற்பனை கும்பலின் பின்னால் பெரிய சட்டவிரோத சங்கிலிப் பிணைப்பு இருப்பதாக வெளியாகும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
- சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, குழந்தை விற்பனை மற்றும் கடத்தல் புகார்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்தச் சிறப்புக் குழு அமைக்க வேண்டும்.
- சென்னையில் வீடுகள் இன்றி சாலை ஓரங்களில் படுத்திருக்கும் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்பட்டது குறித்த வழக்கில் பழனிச்சாமி அரசின் மோசமான செயல்பாடுகளைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.
- நாட்டின் எதிர்காலம் குழந்தைகள். அவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.
- 100க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கும், வட மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதற்கான காரணம் என்ன?’ என்று, பழனிச்சாமி அரசைப் பார்த்து அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்வி இன்னும் பதில் இன்றி அப்படியே இருக்கிறது.
- இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் குழந்தை கடத்தலை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.