இது குறித்து, சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பொறியியல் மாணவர் சேர்க்கையில் இணையதளம் மூலம் பொறியியல் கலந்தாய்வு எந்தவித முறைகேடும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுவருகிறது.
பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு சுழற்சி முறையில் மிகத் துல்லியமாக மாணவர் சேர்க்கைப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. ஆகவே, மாணவர்கள் இது குறித்துக் குழப்பம் அடையத் தேவையில்லை.
ஏதேனும் புகார் இருந்தால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் புகார் மையத்தில் 2235 1014, 2235 1015 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் tnea2019enquiry@gmail.com மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். பொதுவாக மாணவர்கள் இணையதளப் பதிவின்போது பெறுகின்ற பயனாளர் குறியீடு, கடவுச்சொல்லை எவரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு தெரிவித்தால் அதுவே மாணவர்களுக்குப் பாதிப்பாகிவிடும்; அதனால் அதனை வெளியில் கூறாதீர்கள்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.