சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, ‘பொறியியல் படிப்பில் சேருவதற்கு இன்று காலை 5:30 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மே 31ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்பில் இணையத்தில் விண்ணப்பம் செய்வதில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்), பற்று அட்டை (டெபிட் கார்ட்), ரூபே கார்டு உள்ளிட்டவைகள் மூலமும் பதிவுக் கட்டணத் தொகையைச் செலுத்தலாம்.
மேலும் தமிழ்நாடு பொறியியல் மாணவர்களின் சேர்க்கை மையங்களில் வரைவோலை (டிடி) ஆகவும் அளிக்கலாம். பொறியியல் படிப்பில் மாணவர்கள் இந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தார்.