ETV Bharat / state

மும்மொழிக் கொள்கை குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு! - செங்கோட்டையன் - அமைச்சர் செங்கோட்டையன்.

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து ஓரிரு நாளில் முதலமைச்சர் தன் முடிவை அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Jun 26, 2019, 6:03 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிய சில முக்கிய தகவல்கள்;

  • இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கல்வி பாடத்திட்டத்தை க்யூ ஆர் கோட் இணைத்து வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் பாடத்திட்டத்தை மாணவர்கள் மடிக்கணினியிலே பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மாணவர்கள் ஓரிரு இடங்களில் போராட்டம் நடத்தி வருவது வேதனையளிக்கிறது. அம்மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவெடுத்துள்ளோம். அதனை அவர்கள் நினைவுகூர்ந்து மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
  • காஞ்சிபுரத்தில் வரும் ஒன்றாம் தேதி தொடங்கி 40 நாள்களுக்கு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கவுள்ளதால் நகரில் படிக்கும் மாணவர்கள் எட்டரை மணி முதல் ஒன்றரை மணிவரை படித்துவிட்டுத் திரும்ப வேண்டும்.
  • தண்ணீர் தேவையைக் காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுப்பளிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
  • ஸ்மார்ட் அட்டை தற்போது 11 லட்ச மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் காடுகள் வழங்கப்பட்டுவிடும்.
  • 102 கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டிடங்கள், கழிப்பறை, சுற்றுச் சுவர்கள், ஆய்வுக் கூடங்கள் என்று பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
  • புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர், நாளை மறுநாளுக்குள் பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
  • தனியார்ப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  • சி.பி.எஸ்.இ க்கு இணையான போட்டித் தேர்வு பாடத்திட்டத்தின் கோப்பு முதல்வரிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அதில் மொழிப் பாடம் இருக்கும்.

Intro:Body:சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

"மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச மடிக்கணினி திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். எங்களை பொறுத்த வரையில் 11 மற்றும் 12 ஆம் ஆண்டு வகுப்பில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கல்வி பாடத்திட்த்தை க்யூ ஆர் கோட் இணைத்து வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் பாடத்திட்டத்தை மாணவர்கள் மடிக்கணினியிலே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவர்களும் படிக்கணினி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களில் 40 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயில்கிறார். எனினும் அவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவெடுத்துள்ளோம். நான்காம் கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அதற்குள் மாணவர்கள் ஓரிரு இடங்களில் போரட்டம் நடத்தி வருவது வேதனையளிக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவெடுத்துள்ளோம். அதனை அவர்கள் நினைவுகூர்ந்து மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் வரும் 1 ஆம் தேதி தொடங்கி 40 நாள்களுக்கு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கவுள்ளதால் நகரில் படிக்கும் மாணவர்கள் எட்டரை மணி முதல் ஒன்றரை மணிவரை படித்துவிட்டு திரும்ப வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் நெரிசலால் சிக்க வாய்ப்புள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். அதனடிப்படையில் முதல்வரிடத்தில் ஒப்புதல் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை அம்மாவின் அசு நிறைவேற்றி வருகிறது.

சில தனியார் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள் ஒரு முறை மட்டும் தான் செயல்படுகிறது என்று செச்ச்திகள் வந்தன. அதனடிப்படையில் முதன்மை கல்வி அலுவலரை அங்கு அனுப்பி வைத்து தண்ணீர் தேவையான தண்ணீரை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தவறும் பள்ளிகள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

ஸ்மார்ட் கார்ட் தற்போது 11 லட்ச மாணவர்களுக்கு வழங்கபட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் காடுகள் வழங்கப்பட்டுவிடும். குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் காடுகள் என்று சிக்கன நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

மூன்று, ஐந்து வகுப்பளின் பாடத்திட்டம் தான் ஒரு சில பள்ளிகளுக்கு சென்று சேரவில்லை. அதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 8 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் படத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே அதை தரவிறக்கியும் படித்துக் கொள்ளலாம்.

102 கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டிடங்கள், கழிப்பறை, சுற்றுச் சுவர்கள், ஆய்வு கூடங்கள் என்று பல்வேறு பணிகள் நாடைபெற்று வருகிறது. அரசின் மூலமாக முதல்வர் ஆணையிட்டுள்ளார். நவார்டு மூலமாகவே விரைந்து எல்லா பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி சுற்றுச்சுவர்கள் அமைத்து தர வேண்டும் என்று மதிப்பீடு செய்யக் கூறியுள்ளார். அது ஒரு மாத காலத்தில் தயார் செய்யப்பட்டு ஆறு மாத காலத்திற்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும்.

புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து முதல்வரே நாளை மறுநளுக்குள் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

கடந்தாண்டு நான்கு பாடத்திட்டங்களும், இந்தாண்டு எட்டு பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டிருப்பதால் சில தவறுகள் ஏற்பட்டுள்ளது. இது அடுத்தாண்டு தொடராது என்று ஆன்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மும்மொழி கொள்கையில் என்ன நிலைப்பாடு என்பதை குறித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளார். நேற்று முதல்வர் எங்களுடன் கலந்து உரையாடியிருந்தார். நாளை மறுநாளுக்குள் அறிவிப்புகள் வெளியாகும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்படௌடு வருகிறது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் ஆறு மாத காலத்துக்குள் பணத்தை பெற்றோர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும். இதை எங்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்தால் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சி.பி.எஸ்.இ க்கு இணையான போர்ட் தேர்வு பாடத்திட்டத்தின் கோப்பு முதல்வரிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அதில் மொழிப் பாடம் இருக்கும்" என்று தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.