ETV Bharat / state

'இந்தி திணிப்புக்கு எப்போதும் எதிரானது காங்கிரஸ்' - கே.எஸ் அழகிரி பேச்சு - BJP

சென்னை: "இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஏற்கும் வரை ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்பதே காங்கிரஸின் கொள்கை" என்று, அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

KSA
author img

By

Published : Jun 5, 2019, 6:43 PM IST

சென்னை அம்பத்தூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி கலந்து பேசுகையில், "சாதாரண குடும்பத்தில் பிறந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இந்திய அரசியலில் கால் பதித்து இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர். இப்போதைய மத்திய அரசு இந்தியை திணிக்க மூன்று மொழி கொள்கை என்ற ஆபத்தான சதிவலையோடு தமிழகத்தில் நுழைக்க முயற்சிக்கிறது. நமது மாணவர்கள் இரண்டு மொழியை பயிலவே கஷ்டப்படுகின்றனர். இதில் மும்மொழி என்றால் எப்படி பயில்வார்கள். ஒருவர் எத்தனை மொழி வேண்டுமானாலும் பயிலாம். அதேவேளையில் எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது," என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், "கலைஞர் இறந்தபோது இப்போதைய எடப்பாடி அரசு, அண்ணா நினைவிடத்தின் அருகில் இடமில்லை என்று நிராகரித்து வரலாற்று பிழை செய்தது. நீதிமன்றம் மூலம் அதை பெற்று தந்தவர் ஸ்டாலின். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தி திணிப்பு என்று ஒவ்வொன்றாக தமிழ் நாட்டில் நுழைக்க முயற்சி நடக்கிறது. அந்த ஆபத்தை தடுக்கும் சக்தி திமுக கூட்டணிக்கு மட்டுமே", என்றார்.

இந்தி " பேசாத மாநிலங்களில் இந்தி ஏற்கும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்பதே காங்கிரஸின் கொள்கை என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை அம்பத்தூரில் டாக்டர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி கலந்து பேசியதாவது, சாதாரண குடும்பத்தில் பிறந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இந்திய அரசியலில் கால் பதித்து இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர் என்றார். இப்போதைய மத்திய அரசு " இந்தி " யை திணிக்க  மூன்று மொழி கொள்கை என்ற ஆபத்தான சதிவலையோடு தமிழகத்தில் நுழைக்க முயல்வதாக தெரிவித்தார். மேலும் நமது மாணவர்கள் இரண்டு மொழியை பயிலவே கஷ்டப்படுகிறார்கள். இதில் மும்மொழி என்றால் எப்படி பயில்வார்கள் என்று கேட்டார் அழகிரி. அதேபோல் ஒருவர் எத்தனை மொழி வேண்டுமானாலும் பயிலட்டும், ஆனால் எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, கலைஞர் இறந்தபோது இப்போதைய எடப்பாடி அரசு அண்ணா நினைவிடத்தின் அருகில் இடமில்லை என்று நிராகரித்து வரலாற்று பிழை செய்துவிட்டது. நீதிமன்றம் மூலம் அனுமதியை பெற்று தந்தவர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார். மேலும் தற்போது தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு முழுகாரணம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்றார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தி திணிப்பு என்று ஒவ்வொன்றாக தமிழ் நாட்டில் நுழைக்க முயற்சி செய்கிறது. அந்த ஆபத்தை தடுக்கும் சக்தி தி.மு.க. கூட்டணிக்கு மட்டுமே என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.