தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் மூன்று நாள்கள் நடந்தன. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பிப்ரவரி 14ஆம் தேதி நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். பின்னர் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளது என அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள குடிநீர் தட்டுப்பாடு பற்றி விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.