அரசு தேர்வுத் துறையின் இயக்குநராக பணிபுரிந்து வந்த வசுந்தராதேவி, கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் ஒய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் மூன்று மாதங்கள் அவருக்கு பணிநீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது பதவிக் காலம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடையவுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த உஷாராணி, அரசு தேர்வுத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தின் செயலாளர் பழனிச்சாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தில் இயக்குநராக பணியாற்றி வந்த லதா, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தின் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.