ETV Bharat / state

விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்! - இந்தியத் தேர்தல் திருவிழா

இந்தியத் தேர்தல் திருவிழாவின் ஒரு அங்கமாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் வாக்காளர்களின் உரிமையையும், கடமையையும் விளக்கும் சிறு தொகுப்பை உங்கள் பார்வைக்காக இட்டுச் செல்கிறோம்.

Tamilnadu Election Polling Day April 18
author img

By

Published : Apr 17, 2019, 3:57 PM IST

Updated : Apr 17, 2019, 11:27 PM IST

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின், உரிமைக் குரலுக்கான நாளாக வாக்குப்பதிவு தினம் மாறியிருக்கிறது. இந்நேரத்தில் தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமையை இத்தேர்தல் நமக்கு அளித்திருப்பது, பொதுமக்களின் சக்தியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எவர் தகுதியானவர் என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்வதால்தான். இது மக்களின் மிகப்பெரும் துருப்புச் சீட்டாகவே இருக்கிறது. நமக்கான உரிமையை நிலைநிறுத்தத் தடுமாற்றம் இல்லாமல், சீரிய சிந்தனையோடு வாக்கு மையத்தை அணுகுவோம்.

கட்சி, சின்னத்திற்கு, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு.... மனிதர்களைத் தேடுங்கள்!

‘நாங்க மூணு தலைமுறையா இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறோம், என் அப்பா இந்தக் கட்சியைச் சேர்ந்தவர், இந்தக் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் என் தம்பி கோபப்படுவான், என் வீட்டுக்காரர் சொல்ற இடத்துல வாக்குப் போடறதுதானே என் கடமை, எங்க சாதி கட்சிக்கு இல்லாம வேற யாருக்கு ஓட்டுப் போட முடியும்...’ - இது போன்ற சமாதானங்கள் ஏற்புடையவையல்ல. இந்தச் சிந்தனைகள், நம்மைத் தகுதியில்லாதவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாமே நமக்கு அடிமைச் சங்கிலியை பிணைத்துக்கொள்வதற்குத்தான் சமம்.

ஒரு காலத்தில் சிறந்த தலைவர்களைக் கொண்ட கட்சி இப்போதும் அப்படியே இருக்கிறதா, அதன் தலைமையும் தொண்டர்களும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா என்பதை யோசித்தாலே புரிந்துவிடும் நம் நினைப்பு எத்தனை அபத்தம் என்று.

சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வாக்குக் கேட்கிறவர்களிடம் நிச்சயம் எந்தவித ஆக்கப்பூர்வமான மாற்றத்தையோ முன்னேற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது. அதுவும் சாதிய ஆணவக் கொலைகள் அதிகரித்துவரும் இந்நாளில் சாதிப் பெருமை பேசும், சாதி, மதத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகளையும் ஆட்களையும் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடின்றி வேட்பாளர்களின் தரத்தை மதிப்பிட்டு, தகுதியானவருக்கு வாக்களித்தாலே போதும், நாம் தெளிவாக இருக்கிறோம் என்பதை அரசியல் செய்கிறவர்களுக்கும் சவுக்கடியாய் புரியவைக்க முடியும்.

உங்களை ஆள்பவருக்கு எது தகுதி?

நம் தொகுதியில் போட்டியிடுகிறவர் ஏற்கெனவே பதவி வகித்தவர் என்றால் அவர் நம் தொகுதிக்காகச் செய்த நலத்திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்புகளில் அவர் செய்த மாற்றம், அரசுப் பணிகளின் தரம், ஊழலின் விழுக்காடு, அவரது சொத்து மதிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்து அவர் முன்வைத்த செயல்பாடுகள், பொதுப் பிரச்னைகளை அவர் அணுகிய விதம், பொது மக்களுடன் அவருக்கு இருக்கும் இணக்கத்தின் அளவு என்று பல கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். இவற்றில் பாதிக்கும் மேல் எதிர்மறையான பதில் வந்தால் நிச்சயம் அவரை உங்கள் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்.

நம் தொகுதியில் பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்றால் அவர் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு வாக்களிப்பது தவறு. பெண்களிலும் மோசமான அரசியல்வாதிகள் உண்டு. ஆண் வேட்பாளர்களுக்கு வைத்திருக்கிற அதே வரையறையை இவர்களுக்கும் வைக்க வேண்டும். இன்னொரு விஷயம், பெண்களைப் பொறுத்தவரை கவுன்சிலர் வேட்பாளர்களிலிருந்து மக்களவை வேட்பாளர்கள் வரை பெரும்பாலானோர் தங்கள் கணவர், தந்தை, மகன் போன்றோரின் கைப்பாவைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, நாம் வாக்களிக்கவிருக்கும் பெண் வேட்பாளர் கைப்பாவையா, சுய ஆளுமை கொண்டவரா என்று பார்த்துத்தான் வாக்களிக்க வேண்டும்.

சிலர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தங்கள் வாக்கை நோட்டாவில் பதிவுசெய்வார்கள். இப்படிச் செய்வதால் தன் அதிருப்தியைத் தெரிவிக்கலாமே தவிர மறு தேர்தல் நடக்கப்போவதில்லை, தகுதியானவர் பதவிக்கு வரப்போவதில்லை. யார் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இது போன்ற சூழலில், ‘எல்லோரும் கயவர்களாக இருந்தால் யாருக்குத்தான் வாக்களிப்பது?’ என்ற எரிச்சல் வரத்தான் செய்யும். அநீதியின் வழியில் செல்கிறவர்களில் ஓரளவுக்காவது மனசாட்சியுடன் மக்கள் பணி ஆற்றுவார் என்ற நம்பிக்கை யார் மீது ஏற்படுகிறதோ அவருக்கு வாக்களிக்கலாம்.

வயதானவர்களாக இருந்தால் அனுபவம் அதிகம் என்ற கணிப்பு தேர்தல் நேரத்தில் பொய்த்துப்போகக் கூடும். அவர்களது அனுபவம், சாட்சியம் இல்லாமல் ஊழல் செய்வதில் வெளிப்பட்டுவிடுவதற்கான ஆபத்து இங்கே அதிகம். சிறந்த நலத்திட்டங்களுடன், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் சாதி, மத பேதமற்ற, ஊழலற்ற... அனைத்தையும்விட பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்கிற ஆட்சி அமைப்போம் என்று உறுதி தருகிறவர்களில் சிறந்தவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்கலாம் தோழிகளே. மாற்றத்தை விதைப்பதற்கான மந்திர சக்தி நம் விரல்களில் இருக்கிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 17, 2019, 11:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.