சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது,
நீட் தேர்வில் கடந்தாண்டைவிட இந்தாண்டு 10 விழுக்காடு தமிழக மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். உயர்கல்வியில் பிற மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு, தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக இடங்கள் பெற்றுள்ளனர். நீட்டிற்கு எதிரான பரப்புரைகள் மாணவர்களாலே முறியடிக்கப்படும். அதற்கு அரசியல்வாதிகள் தேவையில்லை. தேர்ச்சியில் இந்தியாவிலேயே ஐந்தாவது இடத்தை நாம் பெற்றிருக்கிறோம். நிச்சயம் அடுத்த முறை முதல் 10 இடங்களைப் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் படியாகக் கட்டிடங்களிலும் கழிப்பறைகளிலும் சின்னங்களைப் பதிவிடுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இருமொழியைக் கொள்கை என்றுதான் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி என்பது விருப்பமான மாநிலத்தின் மொழியை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கற்பதற்காகத் தான். மொழி பரிமாற்றம் என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் அதைத் தமிழாக அறிவித்தால் மகிழ்ச்சிதான். காவேரி கோதாவரி திட்டம் 60,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்’ என்றார்.