இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் தமிழில் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட போட்டியில், தற்போது 2 பேர் எலிமினேஷனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த சீசனில் தொடர்ந்து பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளது. முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளரான வனிதாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பிக்பாஸ் வீட்டிற்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்திற்கும், விஜய் டிவிக்கும் மத்திய, மாநில புகையிலை கண்காணிப்பு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டம் 2003, பிரிவி 4-இன் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பதற்கு என்று தனியான ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தண்டனைக்குரியது என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மநீம தலைவர் கமல்ஹாசன், புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையின் போது பொது இடத்தில் புகைப்பிடித்தற்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் உள்ளது.