ETV Bharat / state

தோனி அவுட்டே இல்ல... அழும் குட்டிச் சிறுவன்..! - வீடியோ வைரல் - Small csk fan cried

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றதை தாங்கிக் கொள்ள முடியாத தோனியின் குட்டி ரசிகர் ஒருவர் புலம்பும் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Small csk fan cried
author img

By

Published : May 13, 2019, 2:21 PM IST

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 149 ரன் எடுத்தது. அதைத் தொடர்ந்து 150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக தொடங்கியபோதும், அதன்பின்னர் தொடர் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வெற்றியை பறிகொடுக்க நேரிட்டது.

ஆட்டத்தின் இறுதி பந்துவரை சென்னை அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது. இப்போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் தோனி ரன் ரன் அவுட் ஆனதே என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அழும் குட்டிச் சிறுவன் - வைரல் வீடியோ

தோனியின் ரன் அவுட் 3வது நடுவரிடம் எடுத்துச்செல்லப்பட்டபோது, தோனிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதை வீட்டிலிருந்து டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், தோனி அவுட் ஆனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுகிறார். அவரின் தாயார் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தபோது, அச்சிறுவன் அழுதுக்கொண்டே 3ஆவது நடுவரை வசைபாடினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Intro:Body:

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணி மோதின. இதில் முதலில் ஆடி 149 ரன் எடுத்த மும்பை சென்னைக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆடிய சென்னை 148 ரன் எடுத்து ஒரு ரன்னில் கோப்பையை பறிகொடுத்தது. இப்போட்டியின்போது சென்னை அணி கேப்டன் தோனி 2 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அப்போது அவருடைய அவுட் சர்ச்சைக்குள்ளானதால் விவகாரம் 3வது நடுவரிடம் சென்றது. அப்போது தோனிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், தோனி அவுட் ஆகியதால் கண்ணீர் விட்டு அழுது கொண்டே 3 வது நடுவரை வசைபாடினார்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.